சர்ச்சையை ஏற்படுத்திய டெனால்டு டிரம்ப்! முக கவசத்தை தவிர்த்தது ஏன்?

0
132

இதுவரை கொரோனா நோய்க்கு பல உலக நாடுகளே லட்சக்கணக்கில் மக்களை இழந்து வரும் நிலையில், அமெரிக்காவில் 2,09,000 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு கடும் பரபரப்பும் மற்றும் மக்கள் பயத்துடன் இருக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். 4 நாட்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் இருந்த டிரம்ப் இன்னும் கொரோனா தொற்று முழுமையாக குணமடையாத நிலையில் நேற்று அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு வந்து அடைந்த பின், மாளிகையின் ஸ்டேட்லே பால்கனிக்கு வந்துள்ளார். அவரை மாளிகைக்கு கொண்டு வந்து இறக்கிவிட்ட  ஹெலிகாப்டரின் ராணுவ வீரர்களுக்கு சல்யூட் அடித்தார். அப்போது பால்கனிக்கு வந்தவ வந்தவர் தனது முக கவசத்தை கழற்றி தனது பாக்கெட்டில் வைத்த பின்னரே சல்யூட் அடித்து உள்ளார்.

மேலும் அதிபர் டிரம்ப், அமெரிக்க மக்களை கொரோனாவை கண்டு அச்சப்பட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். அதிபர் டிரம்ப், இன்னும் கொரோனா முழுமையாக குணமடையாத நிலையில் மாளிகைக்கு வந்ததும் முக கவசத்தை தவிர்த்து இவ்வாறு நடந்து கொண்டதும் அங்கே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபள்ளிகள் திறக்கப்படுவதை விட மாணவர்களின் உடல் நலனும் உயிரும் நான் முக்கியம்! அமைச்சர் பேட்டி!
Next articleமுதலமைச்சர் பதவி யாருக்கு? பரபரப்பான இறுதி கட்ட ஆலோசனை!