இந்திய வடகிழக்கு மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் :!

0
189

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் பகுதியில் இன்று (புதன்) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில் ,மணிப்பூர் மாநிலத்தில் உக்ருல் மாவட்டத்தில் இன்று காலை அதிகாலை 3.32மணி அளவில் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

https://twitter.com/NCS_Earthquake/status/1313615866538360832?s=20

இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

Previous articleஇந்தியாவில் ஒரே நாளில் 986 பேர் பலி! அக். 7 கொரோனா பாதிப்பு நிலவரம்!
Next articleஅதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு! தொண்டர்கள் கொண்டாட்டம்!