மரவள்ளிக்கிழங்கு நடுவே கஞ்சா செடி வளர்ப்பு !!

0
189

தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

திருச்சி ,மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் அதிக அளவில் கஞ்சா உட்கொள்வதாக எழுந்த புகாரில், அனைத்து மாவட்டத்திலும் கஞ்சா விற்பனை குறித்து சோதனை நடத்த காவல்துறை முடிவு செய்தனர். இதனால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் என்பவர், மரவள்ளிக் கிழங்கு பயிரிட வயலில் கஞ்சா செடியும் பயிரிட்டுள்ளதாக அவர் அவரது மகன் கண்ணன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இவர் ,தனது சொந்த நிலமான 2 ஏக்கர் நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வந்துள்ளார். அதேசமயம் மரவள்ளிக்கிழங்குக்கு நடுவே கஞ்சா செடிகள் வளர்த்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் மரவள்ளிக் கிழங்கு பயிர் சாகுபடி செய்யப்பட்டதற்கு நடுவில் 20 கஞ்சா செடிகள் வளர்த்து பராமரித்து வந்தது சோதனையில் தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் தர்மலிங்கம் மற்றும் அவரது மகன் கண்ணன் ஆகியோர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Previous articleகாசிமேடு மீனவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!
Next articleசசிகலாவின் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட 2000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்..! வருமான வரித்துறை!