தமிழகத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை! அக். 07 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

0
179

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,447 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,35,855 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 67 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,984 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5,524 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினோர்களின் மொத்த எண்ணிக்கை 5,80,736 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய தேதியில் 45,135 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 93,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 79,57,106 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று மட்டும் 1,369 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,76,779 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 124 என மொத்தம் 190 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

Previous articleமுகக்கவசம் கையுறை அணியாமல் வருபவர் மீது நடவடிக்கை – மதுரை உயர் நீதிமன்றம் தகவல்
Next articleஇந்த ராசிக்கு இன்று பொன் பொருள் வாங்குவார்கள்! இன்றைய ராசி பலன் 08-10-2020 Today Rasi Palan 08-10-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here