கொரோனா தொற்று தொடங்கிய காலம் முதல் இன்று வரை பிரதமர் மோடி அவர்கள் மக்களுக்கு அரசு முழு பாதுகாப்பும், நம்பிக்கையும் ஏற்படுத்தும் வகையில் பணியாற்றுகிறது என்பதை பதிவிட்டு கொண்டு வருகிறார். அவரின் ஒவ்வொரு செயலிலும் மக்களின் நலன் குறித்து அனைத்தும் இருப்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ‘மக்கள் இயக்கம்’ என்று பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். அதற்கு அடித்தளமாக அவரின் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது : “தற்போது மக்கள் அனைவரும் இந்த கொரோனா வைரஸ் என்ற நோயை எதிர்த்து அவர்களே களத்தில் இறங்கி நேருக்கு நேராக எதிர்கொண்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
மேலும் “முன்கள போராளிகளால் இந்த கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இன்னும் வலுப்பெற்று உள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் அனைவரும் முககவசம் அணிவதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற செயற்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறியுள்ளார்.
மக்கள் அனைவரும் இனி வரும் பனி காலங்களில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் பண்டிகை காலங்களில் கூட்டமான இடங்களுக்கு செல்லாமல் எச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.