கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தடை – இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை தகவல்!

0
83

கொரோனா தொற்று பரவலுக்கு பல நாடுகளிலும் மருந்து தயாரித்து வருகின்றனர். ரஷ்யாவிலிருந்து உருவான  தடுப்பு மருந்து முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையை கடந்துள்ளது. இம்மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனைக்காக தயார் நிலையில் உள்ளது.

ஸ்புட்னிக் எனும் இந்த தடுப்பு மருந்து தற்போது இந்தியாவில் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த ரஷ்யா, இந்தியாவிடம்  அனுமதி கேட்டுள்ளது. ஆனால் இம்மருந்தை அதிக அளவிலான மனிதர்கள் மீது  செலுத்தி பரிசோதனை நடத்தக்  கோரி அனுமதி கேட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா தயாரித்துள்ள இந்த ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை இந்தியாவில் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்தவும், இந்தியா முழுவதும் விநியோகம் செய்யவும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரி என்ற இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஷ்யா, இந்தியாவிடம் அனுமதி கேட்டிருந்த விண்ணப்பத்திற்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் குறைந்த அளவிலான மனிதர்கள் மீது மூன்றாம் கட்ட பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K