திருவனந்தபுரம் நங்கை அம்மன் பல்லாக்கு இன்று புறப்பாடு !!

0
121

வருடம் ஒருமுறை நடக்கும் நவராத்திரி திருவிழாவையொட்டி, கன்னியாகுமரியிருந்து நங்கை அம்மன் ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவிற்கு கன்னியாகுமரியிருந்து நங்கை அம்மன் வேளிமலை முருகன் மற்றும் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட சாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விழா முடிந்ததும் மீண்டும் அங்கிருந்து கொண்டுவரப்படும்.

வருட வருடம் நடைபெறும் இத்திருவிழாவில், இந்த ஆண்டு ஆண்டும் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 17-ஆம் தேதி தொடங்கயுள்ளது.

சுவாமி சிலைகளை கொண்டு செல்லும்போது அதனை ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள். ஆனால், தற்போது நிலவி வரும் கொரோனா காரணமாக திருவிழா நடைபெறுமா ? என்று பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில், குறைவான மக்கள் கொண்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.அதன்படி இன்று சுவாமி சிலைகள் கொண்டு செல்லப்பட்டனர்.

முக்கிய வீதிகள் வழியாக நங்கையம்மன் பல்லாக்கு பத்மநாபபுரம் அரண்மனையை சென்றடைந்தது .மேலும் வேளிமலை முருகன் பல்லாக்கு, சரஸ்வதி அம்மன் யானை மீது செல்லும் பல்லாக்கு நாளை புறப்பட இருக்கிறது.

இதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் நிலையில் , பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டனர்.

Previous articleமாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு !!
Next articleஇரண்டாம் குத்துப்பட இயக்குனர் பாஜகவில்..?!