56 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களை பிரான்சிலிருந்து இந்தியாவிற்கு வர 2016ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்துள்ளனர். அதில் ஏற்கனவே ஐந்து விமானங்கள் இந்தியாவிற்கு ஜூலை மாதம் 29ஆம் தேதி அம்பாலா வந்தடைந்தது.
அதன்பின் செப்டம்பர் ஐந்தாம் தேதி ரபேல் விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டது. தற்போது புதிதாக நான்கு ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வர தயாராக உள்ளது இன்னும் சில வாரங்களுக்குள் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டு இறுதிக்குள் அனைத்து விமானங்களும் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ரபேல் விமானங்களின் அடுத்த பேச்சின் நிலைகளை அறிய இந்திய விமானப்படை குழுவினர் பிரான்ஸ் சென்றுள்ளனர்.
ரபேல் விமானம் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளதாகும். அதாவது சுமார் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக டேட்டாக்களை பதிவு செய்து வைக்கும் வசதியும், 10 டன் எடையை ஏற்றி செல்லும் வசதியும், தரையில் இருந்தும் கப்பலில் இருந்தும் பறக்கும் வசதியும், ட்ராக் சிஸ்டம், ஏவுகணை எதிர்ப்பு திறன், மலைப்பாங்கான தரையிலிருந்து கூட இயக்கும் வசதி உள்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளதாகும்.