உங்க நாக்கு இப்படி இருக்கா? அப்போ உங்களுக்கு இந்த நோய் ஆக கூட இருக்கலாம்!

0
644

நாம் மருத்துவர்களிடம் சென்றால் அவர்கள் முதலில் வாயை திறங்கள் என்று கூறுவார்கள். காரணம் அவர்கள் நாக்கை பரிசோதிப்பார்கள். நாக்கு எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்து தான் உடல் நல்ல ஆரோக்கியத்தை பற்றி அவர்கள் சொல்லுவார்கள். அப்பொழுது நம் நாக்கு நமது ஆரோக்கியத்தை குறிக்கிறது. இப்பொழுது எந்த மாதிரியான நாக்கு எந்த மாதிரியான உடல்நல ஆரோக்கியத்தை குறிக்கிறது என்று பார்ப்போம்.

சிவப்பு நிற நாக்கு:

சிவப்பு நிற நாக்கு உள்ளவர்கள் வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து குறைவால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். பொதுவாக சைவ உணவை சாப்பிடுபவர்களுக்கு தான் இந்த மாதிரியான வைட்டமின் சத்து குறைபாடு ஏற்படும். ஏனெனில் அவர்கள் சைவ உணவை சாப்பிடும் பொழுது வைட்டமின் பி12 அதிகமாக கிடைக்காது. அதனால் அவர்களுக்கு நாக்கு சிவப்பு நிறத்தில் இருக்கும்.

பழுப்பு நிற நாக்கு:

மதுப்பழக்கம், புகைப்பிடித்தல், புகையிலை போடுவோர் ஆகியவர்களுக்கு தான் நாக்கு பழுப்பு நிறத்தில் இருக்கும். இவ்வாறு பழுப்பு நிற நாக்கு கொண்டவர்களுக்கு வாயில் பயங்கரமாக துர்நாற்றம் வீசும். துர்நாற்றம் வீசாமல் இருக்க கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட்டு நல்ல பழக்கத்திற்கு மாற்றிக் கொள்ளவும். தினமும் கிராம்பு சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் நீங்கும்.

வெள்ளை படல நாக்கு:

உங்கள் நாக்கின் மீது வெள்ளை அல்லது மஞ்சள் நிற படலம் போல இருந்தால் உங்களுக்கு ஈஸ்ட் பிரச்சனை இருப்பதாக அர்த்தம். ஈஸ்ட் என்பது ஒரு வித கேண்டிட் நோய்த்தொற்று என்று கூறுவார்கள்.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்களுக்கும் இந்த மாதிரியான வெள்ளை மற்றும் மஞ்சள் நிற படலம் நாக்கின் மீது இருக்கும்.

சுருக்கங்கள் கொண்ட நாக்கு:

பொதுவாக சுருக்கங்கள் கொண்ட நாக்கு முதியவர்களுக்கு இருக்கும். சுருக்கம் மற்றும் வெடிப்பு ஏற்பட்டு அந்த நாக்கு காணப்படும். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் இந்த மாதிரியான நாக்கு மாறும். இந்த மாதிரியாக சுருக்கங்கள் மற்றும் வெடிப்பு ஏற்பட்டால் நீங்கள் வாயை நன்கு பராமரிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என தெரிந்து கொள்ளுங்கள்.

 வெள்ளை புள்ளிகள் உள்ள நாக்கு:

வெள்ளை புள்ளிகள் உங்கள் நாக்கில் காணப்பட்டால் புகைபிடித்தலின் போது நாக்கில் உள்ள செல்கள் அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டு அதீத வளர்ச்சி அடைவதால் இந்த மாதிரி புள்ளிகள் தோன்றும். நீங்கள் புகை பிடிக்காதவர்கள் எனில் உன் நாக்கு அதிகமாக தேய்மானம் அடைவதனால் இந்த வெள்ளை புள்ளிகள் தோன்றும் என்று கூறப்படுகிறது.

மேலும் நாக்கில் காயங்கள் மற்றும் கொப்புளங்கள் அதிகமாக இருந்தால் அதை விரைவில் கவனம் செலுத்தி சரிசெய்துவிட வேண்டும். இல்லையெனில் அது புற்று நோய்க்கு வழிவகுத்துவிடும்.

மேலும் உங்கள் நாக்கு எப்பொழுதும் எரிச்சலுடன் காணப்படுகிறது என்றால் உங்கள் டூத் பேஸ்ட் காரணமாக இருக்கலாம். அதனால் அலர்ஜி ஏற்பட்டு எப்பொழுதும் ஒருவித எரிச்சலுடன் காணப்படலாம்.

உங்களது நாக்கு எப்படிப்பட்டது என அறிந்து அதற்கேற்ற தீர்வை ஆராய்ந்து சரிசெய்து கொள்ளவும்.

 

 

 

 

Previous articleஇதய நோய் தீர, இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்க அருமையான நாட்டு வைத்தியம்!
Next articleஇன்று வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்! எப்படி பார்ப்பது..? முழு விவரம்!