தமிழகத்திலேயே முதல்முறையாக அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கேன பொருத்தப்பட்ட பெரிய ஆக்சிஜன் சிலிண்டர் !!

0
68

சேலம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளாகவே புதியதாக 35 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றில், சேலம் மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சேலம் மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை மட்டுமே வென்டிலேட்டர் வசதியுள்ள அரசு பொது மருத்துவமனையாக உள்ளது . இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரோனா நோயாளிகளும் சேலம் அரசு பொது மருத்துவமனைலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் கொரோனா நோயாளிகளின் வசதிக்காக தமிழகத்திலேயே முதல் முறையாக 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் சிலிண்டர் சேலம் அரசு பொது மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது.

சேலம் அரசு பொது மருத்துவமனையில் இதற்கு முன்பு பல இடங்களில் சுமார் 13,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நாளுக்குநாள் நோய்தொற்று அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு கூடுதலாக ஆக்சிடெண்ட் தேவைப்படும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்டிப்படையில் தமிழகத்திலேயே முதல் முறையாக 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிசன் சிலிண்டரை சேலம் அரசு பொது மருத்துவமனையில் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஆக்சிஜன் சிலிண்டரானது , மருத்துவமனையின் பழைய டீன் அலுவலகத்தின் கொரோனா அறைக்கு அருகில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது.