பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் வருகை!

0
81

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாகவே பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

இன்று பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. குறைந்த எண்ணிக்கையில், அதாவது 50 சதவீத எண்ணிக்கையில் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். 

மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றும் படியும் அறிவுறுத்தப்படுகின்றனர்.  பெற்றோரின் விருப்பத்துடன் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டும் பள்ளி வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே பள்ளிகள் நடத்தப்படுமாம். மேலும் பள்ளிக்கு மாணவர்களை வரச்சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K