நரம்புகள் கை விரல்களில் இருந்து ஆரம்பித்து கால் வரை பின்னி கிடக்கின்றன. நாம் அக்குபஞ்சர் முறை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அது போல தான் இது. எந்த விரலை அழுத்தினால் என பிரச்சினை தீரும் என்பதை பார்ப்போம்.
கட்டை விரல்:
கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதனால் மன ரீதியான பிரச்சனைகள் அகலும். மனம் நிம்மதி அடையும். நல்ல தூக்கம் வரும். உடலின் சக்தியை மேம்படுத்த உதவுகின்றது. கட்டைவிரல் வயிறு மட்டும் மண்ணீரலுடன் தொடர்புடையதாகும். தொடர்ந்து கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுக்கும் பொழுது வயிறு மற்றும் மண்ணீரல் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும். கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுப்பதனால் ரத்த வெள்ளையணுக்கள் சிவப்பணுக்கள் அதிகரித்து செரிமானப் பிரச்சனையை சரி செய்கிறது.
ஆள்காட்டி விரல்:
உங்கள் ஆள்காட்டி விரலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதனால் உங்களது பயம் மற்றும் கோழை தன்மை நீங்கும். அடிமைத்தனத்தை நீக்கி முயற்சி செய்யும் எண்ணத்தை மேலோங்கச் செய்யும். இந்த விரல் சிறுநீரக மண்டலத்தோடு தொடர்புடையதால் சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் இந்த விரலை நீங்கள் அழுத்தம் கொடுத்து வந்தால் சரிசெய்யலாம். மேலும் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும். நீர் வறட்சி இல்லாமல் பாதுகாக்க உதவுகிறது.
நடு விரல்:
நடுவிரலை தொடர்ந்து அழுத்தத்தைத் தந்து வருவதனால் கோபத்தை குறைக்கிறது. தலை பகுதியில் அதிகமான ரத்த ஓட்டத்தை மேம்படுத்த செய்து தலைவலியை போக்குகிறது. இது கல்லீரல் மற்றும் பித்தப்பைகளுடன் தொடர்பு உடையதால் இந்த பாகங்கள் மேம்பட உதவுகிறது. உடலின் சக்தியை கூட்டுகிறது. நடு விரலின் அடிப்பகுதியில் அழுத்தம் கொடுக்கும் பொழுது சிறுநீரகக் கற்கள் உருவாவதனால் ஏற்படும் வலியை போக்குகிறது.
மோதிர விரல்:
இந்த மோதிரவிரல் நுரையீரல்கள் உடன் தொடர்புடையது. அதனால் மோதிரவிரல்களை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தால் சுவாச கோளாறுகள் அனைத்தும் நீங்கும். மனதில் உள்ள தீய எண்ணங்கள் அனைத்தும் அகலும். தசைகளை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. நரம்பு மண்டலங்களை சீராக்கி நரம்புக் கோளாறுகளை சரி செய்கிறது.
சிறுவிரல்:
சிறுவிரலைகளை தொடர்ந்து அழுத்தம் அழுத்தம் கொடுப்பதனால் மூளைத் திறன் அதிகமாகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. நல்ல எண்ணங்களை சீராக்க உதவுகிறது
இதயத்திற்கு வலு கொடுக்கும். கால் வலி குறையும். எண்ணம்,சிந்தனை மேம்படும். மூளை நரம்புகளை வலுப்படுத்தும்.
அதனால் சிறு நேரம் செலவழித்து உங்கள் கைகளுக்கு அழுத்தம் கொடுப்பது மூலம் விரைவில் நோய்க்கான தீர்வு கிடைக்கும்.