இதை படித்தால் இனி வாழைப்பழ தோலை தூக்கி வீசமாட்டீங்க!

0
105

வாழைப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பது நமக்குத் தெரியும். ஆனால் தோலில் என்ன சத்துக்கள் உள்ளது என்பதை பற்றி தெரியுமா? அதை பற்றி தான் இங்கு நாம் விரிவாக பார்க்க உள்ளோம்.

1. ஒரு சிலருக்கு பாதங்களில் எரிச்சல் மற்றும் புண்கள் ஆகியவை இருக்கும். அதாவது கால் ஆணி என்று சொல்லப்படக்கூடிய புண்கள் இருக்கும். வாழைப்பழத் தோல் இதனை சரி செய்கிறது. வாழைப்பழ தோலை எடுத்து எங்கு புண்கள் உள்ளதோ அங்கு வைத்து நன்றாக அழுத்தி தேய்த்துவிட்டு அதை அப்படியே கட்டிக் கொள்ளலாம் அல்லது சாக்ஸ் போட்டுக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர புண்கள் மறையும்.

2. ஒரு சிலருக்கு அம்மை நோய் வந்து அதன் தழும்புகள் மறையாமல் இருக்கும். அதே போல் முகப்பருக்கள் வந்து அந்த தழும்புகள் மறையாமல் இருக்கும். ஆபரேஷன் செய்திருந்தால் ஆப்ரேஷன் செய்த இடத்தில் தழும்புகள் மறையாமல் இருக்கும். இதனை வாழைப்பழ தோல் சரி செய்கிறது. வாழைப்பழத் தோலை வைத்து எந்த இடத்தில் தழும்புகள் இருக்கின்றதோ அந்த இடத்தில் நன்றாக தேய்த்து விட்டு விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி விட்டு வாருங்கள். தொடர்ந்து இதனை செய்து வரும் பொழுது தழும்புகள் மாயமாய் மறையும்.

3. மருக்கள் அல்லது படர்தாமரை இருக்கக்கூடிய இடத்தில் வாழைப்பழத் தோலை தேய்த்து விடலாம்.

4. வாழைப்பழத் தோலை செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். வாழைப்பழத் தோலை மிக்ஸியில் அரைத்து செடிகள் உள்ள இடத்தில் குழி தோண்டி புதைத்து விட்டால் செடிகள் வேகமாக வளர்ந்து நன்கு பூ மற்றும் காய்கள் காய்க்கும்.

5. வாழைப்பழத் தோலை சிறிது சிறிதாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைத்து பின் ஆற வைத்து ஒரு ஸ்பூன் தேனை கலந்து பருகலாம். இப்படி பருகி வரும் பொழுது முடி கொட்டுதல் பிரச்சினையிலிருந்து தீர்வு கிடைக்கும். மேலும் இந்த தண்ணீர் மலச்சிக்கலை சரி செய்கிறது.

இதுபோல் எண்ணற்ற மருத்துவ குணம் வாழைப்பழத் தோலில் அடங்கியுள்ளது. இதில் விட்டமின் b6, b12 ஆகிய வைட்டமின்கள் உள்ளதால் உடலுக்கு பலம் சேர்த்து உடலில் உள்ள பிரச்சனைகளை குறைக்கிறது.

Previous articleஇது போதும்! 3 நாட்களில் மஞ்சள் பற்கள் வெண்மையாக மாறிவிடும்!
Next articleஇந்த 4 வரியை ஒரு முறை உச்சரித்தால் போதும்! ஜாதகத்தில் உள்ள எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் தாக்கம் குறைந்து விடும்!