வெங்காயத்துக்கு போட்டியாக வரும் உருளைக்கிழங்கு !! அதிர்ச்சியில் பொதுமக்கள்

0
110

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காய சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயம் வர்த்தகம் குறைந்ததன் காரணமாக விலை உயர்வு அதிகரித்து வந்த நிலையில், தற்போது உருளைக்கிழங்கு விலையும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காயம் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்ததன் காரணமாக விலை உயர்ந்து ஒரு கிலோ வெங்காயம் ரூபாய்.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு ஏகிப்பு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து ஒரு கிலோ ரூபாய்.45-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டியில் உருளைக்கிழங்கு வரத்து குறைந்ததன் காரணமாக விலை அதிகரித்து வருகின்றது.45 கிலோ உருளைக்கிழங்கு முட்டையின் விலை வழக்கமாக விலையைவிட ரூபாய்.1000-க்கும அதிகமாக உயர்ந்துள்ளது.

இதனால் தற்போது ஒரு கிலோ உருளைக்கிழங்கு விலை ரூபாய். 100-க்கு விற்பனை செய்து வரும் நிலையில், தேவைகளைப் பொறுத்து மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம்…! குருபூஜை விழா கொண்டாட்டம் தொடங்கியது…!
Next articleமுன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி காலமானார்!