தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் பாதிப்பு! அக். 23 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

0
185

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 3,057 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,03,250 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 33 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,858 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 4,262 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினோர்களின் மொத்த எண்ணிக்கை 6,59,432 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய தேதியில் 32,960 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 81,472 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 93,56,580 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று மட்டும் 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,94,139 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 131 என மொத்தம் 197 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

Previous articleஒல்லிக்குச்சி உடம்பு  காரியா இது! போட்டோவைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
Next articleஅதிமுக அமைச்சர் எழுப்பிய கேள்வி! அது என்ன கேள்வி தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here