அதிமுக அமைச்சர் எழுப்பிய கேள்வி! அது என்ன கேள்வி தெரியுமா?

0
187

சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்புகளைச் சேர்ந்த சட்டப்பட்டதாரிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மொத்த சட்டப்பட்டதாரிகள் 63 நபர்கள் ஆகும். இந்நிகழ்ச்சியை தலைமை தாங்கி, சிறப்புடன் நடத்திக் கொடுத்தவர் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் ஆவார். 

அமைச்சர் ஜெயக்குமார் அவர்களே அனைவருக்கும் ஊக்கத் தொகையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவரிடம், ‘உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் கால அவகாசம் கேட்டதை, அதிமுக மறைத்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார் அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக அமைச்சர் கூறியதாவது- ‘ஆளுநர் கால அவகாசம் கேட்டது வெளியே கூற இயலாது என்ற காரணத்தினாலே, ஆதிமுக “விரைவில் ஒப்புதல்  அளிக்கப்படும்” என்ற வார்த்தையை உபயோகித்து உள்ளது’ என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் பாதிப்பு! அக். 23 கொரோனா பாதிப்பு நிலவரம்!!
Next articleபுதுசு கண்ணா புதுசு…! இனி எல்லாமே புதுசு…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here