திருமணம் நடக்காததினால் மன விரக்தியில் இளைஞன் செய்த செயல் !! அதிர்ச்சியில் பெற்றோர் !!

0
138

 

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்காததினால் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்த இளைஞர் மணி (26) என்பவர், தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதனால் மன விரக்தியில் இருந்துள்ளார் . இதனைத்தொடர்ந்து வீட்டில் ஒரு அறைக்குள் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வதாக பெற்றோரிடம் மிரட்டியுள்ளார்.

சிறிது நேரம் கழித்த அறையில் எவ்வித சத்தமும் இதனால் அச்சம் அடைந்த பெற்றோர், தீயணைப்பு துறைக்கு தகவல் சொல்லி அவரிருந்த அறையை உடைத்து பார்த்தனர் .அப்போது கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் ரத்த காயத்தோடு இருந்த இளைஞன் மணியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
தற்பொழுது வரை தீவிர சிகிச்சையில் உள்ளார்.

மன விரக்தியால் இளைஞன் மணி செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகைது செய்யும் வரை போராட்டம் தொடரும்…! விழிபிதுங்கி நின்ற காவல்துறையினர்…!
Next articleஇனி அனைவரும் டிவி பார்க்கலாம் தமிழக அரசு அறிவிப்பு…! மாணவர்கள் மகிழ்ச்சி…!