முதல்வரைப் பாராட்டும் கி வீரமணி! கூட்டணி மாறுகின்றாரா!

0
148

சமூக நீதிக்காகவும் அரசுப் பள்ளி மாணவர்களை அவனைப் பார்த்துக் கொண்டும் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தே நீட் தேர்வில் வெற்றி அடைந்த மாணவ மாணவிகளின் மருத்துவ கனவுகளை நிறைவேற்றும் வகையில் 7.5 சதவீத ஐடா ஒதுக்கீட்டு அரசாணை வெளியிடப் படுகிறது என்று தனது வலைதளப்பாக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார்.

தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம் என்று திராவிட தெரிவித்திருக்கின்றார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த மருத்துவக்கல்வி இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற இட ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் சுமார் இரண்டு மாதங்கள் காலதாமதம் செய்து, மேலும் சில நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில். தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் அதன் தலைவர்களும் எவ்வளவோ வற்புறுத்தியும் அதற்கு செவி சாய்க்காத ஆளுநரை தொடர்ந்து தமிழக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 362-வது பிரிவை பயன்படுத்தி தன்னுடைய செயல்பாட்டினை ஒரு ஆணையாக வெளியிட்டுஇருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மருத்துவ மாணவர்களின் தேர்வுகள் மூலம் ஒரு கதவு திறக்கப்படுகின்றது தமிழக அரசின் கொள்கை முடிவாகவும் இது அமைந்திருப்பதால் தற்போதைய நிலையில் இந்த முடிவை வரவேற்கிறோம் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

தமிழக அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டுகின்றோம் என்று மஜக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்திருக்கின்றார்.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதித்து வந்த சூழலில் சமூக நீதியை காப்பாற்றும் விதமாக தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பது துணிச்சலான நடவடிக்கை என்று பாராட்டுகின்றோம் இதற்கு எந்த ஒரு ஆபத்தும் வந்து விடாத வண்ணம் தமிழக அரசு கவனத்துடன் கையாள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Previous articleமனைவியை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற கணவன் !!
Next articleபக்தர்கள் விரும்பும் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி !! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !!