மனைவியை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற கணவன் !!

0
195

பாகிஸ்தான் பகுதியை ஒட்டி உள்ள பஞ்சாப் மாகாணத்தில் வடக்கு சர்கோதா என்ற பகுதி அமைந்துள்ளது. அங்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் மற்றும் தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார் . இந்நிலையில் கணவன், மனைவியை 4 பேர் கொண்ட கும்பலிடம் ரூபாய் 5 ஆயிரத்திற்கு விற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 21 நாட்கள் கழித்து விற்கப்பட்ட பெண், 4 பேர் கொண்ட கும்பல் மூலம் தினமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

தினமும் கொடுமையில் தவித்து வந்த அப்பெண், யாரும் இல்லாத நேரத்தில் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். ஆனால் அந்தப் புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்தனர் . இதனையடுத்த, தனது கணவன் மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பலுக்கு எதிராக சர்கோதா செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த சம்பவம் குறித்து விரிவாக விளக்கம் அளிக்க வரும் இரண்டாம் தேதி காலக்கெடு விதித்தது மாவட்ட காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Previous articleகோ பேக் ஸ்டாலின்! பசும்பொன் கிராமத்தில் பரபரப்பு!
Next articleமுதல்வரைப் பாராட்டும் கி வீரமணி! கூட்டணி மாறுகின்றாரா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here