National

அண்ணன் இருந்த இடத்தில் இன்னொருவனா? அண்ணியை கொன்ற கொழுந்தன்!

Photo of author

By Kowsalya

அண்ணன் இருந்த இடத்தில் இன்னொருவனா? அண்ணியை கொன்ற கொழுந்தன்!

Kowsalya

Button

மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்ணிக்கு வேறு ஒருவருடன் கள்ள காதல் ஏற்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்த கணவனின் தம்பி டிராக்டர் ஏத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்னா மாவட்டத்தில் உள்ள சாப்பல்கான் என்ற கிராமத்தில் வசிக்கும்

மரியா லால்சாரே இவருக்கு 32 ஆண்டுகள் ஆகிறது. இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் கொழுந்தனார் மற்றும் மாமனர் உடன் அவர்களது வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியில் சேர்ந்த பகவத் என்பவருடன் உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விசயம் மரியாவின் கொழுந்தன் மற்றும் மாமனாருக்கு தெரியவர இருவரும் கண்டித்து உள்ளனர்.

அடிக்கடி மரியாவை மிரட்டி கள்ள காதலை விடும்படி கேட்டுக் கொண்டு உள்ளனர். அதனால் மார்ச் 30 ம் தேதி, பகவத் மற்றும் மரியா இருவரும் அந்த ஊரிலிருந்து தப்பி ஓடி குஜராத்துக்கு சென்று வாழ்ந்து வந்துள்ளனர்.

அதன்பின்னர் மரியாவின் கொழுந்தன் மற்றும் மாமனார் சேர்ந்து கள்ள காதல் ஜோடிகள் காணாமல் போனதாக போலீசில் புகார் பதிவு செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி ஏப்ரல் 22 ம் தேதி அன்று குஜராத்தில் இருந்து அந்த ஜோடிகளை மீண்டும் அழைத்து வந்து உள்ளனர். அதன் பின்னர் அவர்கள் அதே கிராமத்தில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

கோபம் தீராததால் அவர்களின் மீது மிகுந்த கோபத்தில் இருந்த பெண்ணின் மாமனாரும் கொழுந்தனாரும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்டரை அவர்கள் மேல் ஏத்தி கொலை செய்துள்ளனர்.

பகவத்தின் மனைவி விகாஸ் லால்சாரே மரியாவின் கொழுந்தன், தனது கணவரையும் மற்றும் மரியாவையும் கொன்று விட்டதாக போலீஸிடம் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்று கொண்ட போலீசார் மரியாவின் கொழுந்தன் மற்றும் அவரது தந்தை மீது ஐபிசி பிரிவு கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேவரை அவமானப்படுத்திய கனிமொழியால்! பசும்பொன் கிராமத்தில் பரபரப்பு!

இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய தமிழகம்! இபிஎஸ் ஓபிஎஸ் மகிழ்ச்சி எதில் தெரியுமா!

Leave a Comment