தேவரை அவமானப்படுத்திய கனிமொழியால்! பசும்பொன் கிராமத்தில் பரபரப்பு!

0
75

 

இந்துக்கள் மற்றும் இந்து மத அடையாளங்களை அழிப்பது திமுகவிற்கு என்ன தான் அப்படி ஆர்வம் என்பது தெரியவில்லை.

இல்லையென்றால் இந்துக்களையும், இந்து மத சம்பிரதாயங்களையும், இழிவுபடுத்துவதில் திமுகவிற்கு ஏதேனும் ஆதாயம் இருக்குமா? என்று நினைக்கத் தோன்றுகிறது.

இல்லையென்றால், வேறு ஏதோ ஒரு தரப்பினரை குஷி படுத்துவதற்காக இந்துக்களையும், இந்துக்களின் சம்பிரதாயங்களையும், திமுக அசிங்கப்படுத்துகிறதா? என்றும் தோன்றுகிறது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் பல அரசியல் கட்சி தலைவர்களும் தேவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்டாலினின் தங்கையுமான, திருமதி கனிமொழி அவர்கள் தன்னுடைய அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில், இந்திய விடுதலைப்போரில், நேதாஜி அவர்களோடு இணைந்து, தமிழகத்திற்கு பெருமை தேடிக் கொடுத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருடைய நேரத்தை நினைவு கூறுவோமாக.

சாதி, மத, வேற்றுமைகளை தாண்டி தமிழர்களாக உயர்ந்திருக்க வேண்டும். என்பதே அவருடைய விருப்பம். அதனை நிறைவேற்ற நாம் பாடுபடுவோம். என்று பதிவிட்டு இருக்கின்றார்.

அப்பதிவுடன் முத்துராமலிங்கத்தேவரின் உருவ படத்தையும், அவர் பதிவு செய்து இருக்கின்றார். முத்துராமலிங்க தேவரின் அடையாளமே அவருடைய நெற்றி எப்போதும் விபூதி உடனே இருக்கும். என்பதேயாகும்.

தெய்வீகமும், தேசியமும், என்னுடைய இரண்டு கண்கள் என்று வாழ்ந்து வந்தவர்.

ஆன்மீக தனி தன்னுடைய உயிர் அளவுக்கு நேசித்த ஒரு தலைவர்.

ஆனாலும் அவருடைய நெற்றியில் விபூதி இல்லாமல், வெறும் நெற்றியுடன் அவருடைய அடையாளத்தை மறைத்து, வீரத்தை மட்டும் நினைவு கூர்ந்து, அரசியல் உள்நோக்கத்துடன், பதிவிட்டு, இருக்கின்றார். திருமதி கனிமொழி.

ஆன்மீகத்தின் மீதும், இந்துக்கள் மீதும், எப்படிப்பட்ட வெறுப்புணர்வு, இருந்திருந்தால், இதுபோன்ற ஒரு செயலை அவர் செய்திருப்பார்.

அந்த அளவிற்கு இந்துக்களுடைய சடங்குகளும், சம்பிரதாயங்களும், மற்றும் அடையாளங்களின் மீதும் திமுகவிற்கு ஒரு பெரிய எதிர்ப்பு, வெறுப்பு, ஆகியவை இருக்கின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் அவர்களுடைய, அனைத்து செயல்களிலும் வெளிப்படுகின்றன