இன்று முதல் நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகிக்கும் புதிய முறை மற்றும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் தொகைகள் குறித்த செயல் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இனிமேல் எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்கு , OTP முறையை எண்ணைய் நிறுவனங்கள் புதிய விநியோகத்தை தொடங்கியுள்ளது. இதன்மூலம் எரிவாயு சிலிண்டர் முறைகேடுகள் குறித்து எளிதாக கண்டறியும் வகையில், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இண்டேன் (Indane) நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய புதிய எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இனி இண்டேன் வாடிக்கையாளர்கள் 7718955555 என்ற புதிய எண் மூலம் முன்பதிவு செய்யலாம்.
மேலும் வாட்ஸ்அப் மூலமாகவும் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் மெசேஜ் விட்டு சென்று REFILL என Type செய்து 7588888824-க்கு அனுப்பவும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மட்டுமே இந்த முன்பதிவு செயல் இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கும், திரும்பப் பெறுவதற்கும் பேங்க் ஆப் பரோடா வங்கி கட்டணம் வசூலித்து வருகின்றது. இது மற்ற வங்கிகளும் விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
நடப்பு கணக்கு, பணக் கடன் வரம்பு ஆகியவற்றை பணத்தை டெபாசிட் செய்தால் மற்றும் திரும்ப பெறுதல் ஆகிய சேவைகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு வங்கி கணக்கில் வைப்புத்தொகையை திரும்பப் பெறுவதற்காக தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு மூன்று முறைக்கு பிறகு, தங்களது கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் போது, அவர்களிடமிருந்து ரூபாய் 150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சேமிப்பு கணக்கு வைக்கும் வாடிக்கையாளர்கள் மூன்று முறை வரை டெபாசிட் செய்ய இலவசமாக இயங்கும் , அதன் பின்பு பணத்தை டெபசிட் செய்வதற்கு ரூபாய் 40 தனியாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.