தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு :! ஆய்வு மையம் எச்சரிக்கை !!

0
148

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் , விவசாயிகள் மற்றும் நீர்நிலைகளை நம்பி வாழும் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ,  தமிழகத்தில் பருவமழை பெய்யும் காலமாக தற்போது உள்ள நிலையில், மக்கள் அனைவரும் நல்ல மழையை எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை ,சிவகங்கை, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டலத்தை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Previous articleவேகமாக செல்லும் ரயில் சோதனையில் ஒரு துளி கூட சிந்தாத தண்ணீர் !!
Next article#திருட்டுப்பயதிருமாவளவன் தேசிய அளவில் அசிங்கப்பட்ட திருமாவளவன்