ஒரு சிலருக்கு கொழுப்பு கட்டிகள் தானாக உடலில் உருவாகும். அவை உணவுப் பழக்கங்களால் ஏற்படுகின்றன. அவ்வாறு உண்டாகும் கொழுப்பு கட்டிகளை எப்படி கரைப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவு. இந்த இயற்கை வைத்தியத்தை நீங்கள் பயன்படுத்தி வரும் பொழுது கொழுப்பு கட்டிகள் தானாகவே கரைந்து வெளியேறிவிடும்.
தேவையான பொருட்கள்:
1. மிளகு 5
2. கழற்சிக்காய் பொடி கால் ஸ்பூன்
3. தேன் ஒரு ஸ்பூன்.
செய்முறை:
1. முதலில் 5 மிளகை எடுத்து கொள்ளவும்.
2. அதை உரலில் போட்டு நன்றாக இடித்துக் கொள்ளவும்.
3. இப்பொழுது ஒரு பவுலை எடுத்துக் கொள்ளவும்.
4. அதில் இடித்து வைத்திருந்த மிளகுப் பொடியை சேர்க்கவும்.
5. இதில் கழற்சிக்காய் பொடி கால்டீஸ்பூன் போடவும். கழற்சிக்காய் பொடி என்பது சூடு கொட்டை. நாட்டு மருந்து கடைகளில் இதன் பொடி கிடைக்கும். அல்லது கழற்ச்சிக்காய் வாங்கி உடைத்தால் உள்ளே கொட்டை இருக்கும் அதை பொடித்து கொள்ளலாம்.
6. ஒரு ஸ்பூன் அளவிற்கு தேன் கலந்து கொள்ளவும்.
நன்றாக கலந்து இதனை எப்போது வேண்டுமானாலும் சாப்பிட்டு வரலாம். இது உடலில் கொழுப்பு கட்டிகள் எங்கே இருந்தாலும் கரைத்து வெளியேற்றும் செய்துவிடும். தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது உங்கள் கண் கூடாக கட்டிகள் கரைவதை பார்ப்பீர்கள்.