86 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

0
134

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 38,074 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,91,731 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 448 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,27,059 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,033 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 79,59,406 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 92.64 ஆக உள்ளது. நாடு முழுவதும் இன்றைய தேதியில் 5,05,265 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 10,43,665 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 11,96,15,857 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த அந்த நபர்! அதிர்ச்சியில் திமுக தலைமை!
Next articleசும்மா சொல்லக்கூடாது சூப்பரா வண்டி ஓட்டுற! குதுகலத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏன் தெரியுமா!