இன்று பரவலாகக் காணப்படும் ஒரு வலி என்றால் அது பல்வலி ஆகத்தான் இருக்க முடியும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வலி அனைவரையும் ஆட்டிப் படைத்த தான் வைக்கின்றது. அதிக இனிப்பு சாப்பிடுவதால் பல் சொத்தை ஆகின்றது. அதேபோல் தேவையற்ற உணவுப் பழக்கங்களாலும் தான் பற்களில் வலி மற்றும் மற்ற பிரச்சனைகள் வருகின்றது. இப்பொழுது பல் வலி மற்றும் பல் சொத்தைக்கான இயற்கையான வழிமுறையை காணலாம்.
தேவையான பொருட்கள்:
1. படிகாரக்கல்
2. பூண்டு
3. உப்பு.
செய்முறை 1:
1. முதலில் ஒரு டம்ளரில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.
2. இப்பொழுது படிகார கல்லை எடுத்துக் கொள்ளவும். படிகாரக்கல் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை லேசாகத் தட்டினாலே உடைந்துவிடும்.
3. படிகார கல்லை சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து கொள்ளவும்.
4. நன்கு கலந்து கொள்ளவும்.
5. தண்ணீரை கலக்கும் பொழுது நிறம் வெண்மை நிறமாக மாறும்.
6. இதை குடித்து ஒரு நிமிடம் வாயில் அப்படியே வைத்துக்கொண்டு பின் கொப்பளித்து துப்பி விட வேண்டும். இது மாதிரியாக முழு தண்ணீரையும் வாயில் வைத்துக் கொப்பளித்து துப்பிவிட வேண்டும்.
7. இந்த மாதிரி செய்யும்பொழுது பற்களில் உள்ள வலிகள் மறைந்துபோகும். ஈறுகள் வலுப்பெறும். பற்களில் உள்ள கிருமிகள் அற்றுப்போகும்.
செய்முறை 2:
1. முதலில் ஒரு பௌலை எடுத்துக் கொள்ளவும்.
2. ஆறு பல் பூண்டை எடுத்து அதனுடன் சிறிதளவு உப்பை சேர்த்து உரலில் நன்றாக இடித்துக் கொள்ளவும்.
3. இந்த பேஸ்ட்டை நன்கு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
4. இந்த உருண்டையை வாயில் எங்கு சொத்தை பற்கள் உள்ளதோ அங்கே வைத்து அடக்கிக் கொள்ள வேண்டும்..
5. இப்பொழுது உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். அதனால் அதை உள்ளே விழுங்கி விடாமல் கீழே துப்பி விடுங்கள்.
6. தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர வாயில் உள்ள சொத்தை பற்கள் சரியாகிவிடும். வலி குறைந்துவிடும்.