இந்தியாவில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தை சார்ந்த அனைத்து தகவல்களையும் திருடுவதற்கு முயற்சி நடந்து வருவதாக மைக்ரோ சாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் அறிக்கையில், ரஷ்யாவிலிருந்தும், வடகொரியாவிலிருந்தும், இந்தியாவில் இருக்கும் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனங்கள் மீது அந்த நாட்டை சேர்ந்த ஹேக்கர்கள், சைபர் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கக்கூடிய கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தி, இந்த தடுப்பூசி குறித்த அனைத்து தகவல்களையும் திருடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக மைக்ரோ சாப்ட் நிறுவனம் தெரிவிக்கின்றது.
அதாவது இந்தியாவில், கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை நடத்தி வரும் நிறுவனங்கள் மீது ஹேக்கிங் முறையை பயன்படுத்தி அந்த நிறுவனங்களின் லாக்-இன் கடவு சொற்களை திருடுவதற்கு முயற்சி நடப்பதாகவும், ரஷ்யாவை சேர்ந்த ஸ்ரான்டியம் நிறுவனமும், வட கொரியாவை சேர்ந்த செரிம் மற்றும் சிங்க் என்கின்ற நிறுவனங்களும் முயற்சித்து வருவதாக மைக்ரோ சாப்ட் நிறுவனம் தெரிவிக்கின்றது.