சசிகலாவுடைய அபராதத்தொகையை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தகவல் தெரிவித்திருக்கின்றது. இந்த செய்தி சசிகலாவை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.
சசிகலாவுடைய தண்டனை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து சிறை விதிகளின்படி சென்ற ஆகஸ்ட் மாதமே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனாலும் சசிகலா விடுதலை சம்பந்தமாக கர்நாடக சிறைத்துறை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. சசிகலாவிற்கு அபராதமாக விதிக்கப்பட்ட 10 10 கோடி ரூபாயை செலுத்தி விட்டால் அவர் முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சசிகலா சார்பாக அவருடைய வழக்கறிஞர் முத்துக்குமார்,நீதிமன்றம் அபராதமாக விதித்த 10.10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தியிருக்கின்றார். சசிகலா உடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பெங்களூரிலேயே சென்ற என சில நாட்களாக தங்கி அவருடைய விடுதலையை உறுதி செய்வதற்கான செயல்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.
இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் மாலையே சசிகலாவின் அபராத தொகையை ஏற்றுக் கொண்டதாக நுட்பத்தின் நான்காவது நகர சிவில் நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்தது.