மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டுவிட்டு அதன் பின்பு அவர் தங்கியிருந்த லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்று இருக்கின்றார். சில நிமிடங்களில் தமிழக முதல்வரும், துணை முதல்வர் அவர்களும் லீலா பேலஸிற்கு நேரில் சென்று அமித்ஷாவை சந்தித்தார்கள்.
முதல்வர், மற்றும் துணை முதல்வர், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அமித்ஷா அவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தார்கள். சில நிமிடங்களில் அமித்ஷாவின் அறையிலிருந்து அமைச்சர் ஜெயக்குமார் வெளியேறிவிட்டார். அதன் பிறகு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் அமித்ஷாவுடன் உரையாடி இருக்கிறார்கள்.
தமிழக அரசின் மீது மக்களுக்கு இதுவரை எந்த ஒரு கோபமும் கிடையாது அதன் காரணமாக மீண்டும் நிச்சயம் நாம் ஆட்சியை பிடித்துவிடலாம். பீகார் மாநிலத்தில் உங்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தது அதே போல தமிழ்நாட்டிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என எடப்பாடி தெரிவித்ததற்கு நிச்சயமாக என்று உறுதியளித்திருக்கிறார் அமித்ஷா. நீங்கள் இருவரும் இவ்வாறு ஒன்றாக இணைந்து செயல்படுவதில் மிக்க மகிழ்ச்சி இது தொடர வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.
யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது தொடர்பாக இப்போது பெரிதாக எதுவும் பேசவில்லை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் எங்கள் கட்சிக்கு உரிய தொகுதிகளைப் பற்றி தெரிவித்து விடுங்கள் என்று முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் தெரிவித்திருக்கின்றார் அமித்ஷா அதோடு இந்த சந்திப்பு நிறைவு பெற்றிருக்கின்றது.