அவர்களுக்கு கூட்டம் கூடினால் மட்டும் பரவாது எங்களுக்கு கூடினால் பரவி விடுமா உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! வாயடைத்துப் போன காவல்துறையினர்!

0
72

பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாட இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்கின்றார் நாகை மாவட்டம் குத்தாலத்தில் மூன்றாவது நாளாக நேற்றைய தினம் தன்னுடைய பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். அமித்ஷா வருகைக்காக கூட்டம் சேரலாம், அரசு நிகழ்ச்சிகளில் முதல்வரின் வருகைக்காக கூட்டம் சேரலாம், ஆனால் உதயநிதிகாக கூட்டம் சேர்ந்தால் மட்டும் நோய் தொற்று பரவி விடுமா என்று அந்த கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இது சம்பந்தமாக திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு சென்னை மாநகராட்சியின் போலீஸ் கமிஷனர் அவர்களை நேரில் சந்தித்து புகார் அளித்திருக்கிறார். இதில் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாகவும், உதயநிதி அவர்களுக்கு எதிராகவும், பாரபட்சமாக காவல்துறை செயல்படுகிறது என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.

இந்த நிலையில், விடுதலை செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் என்னை கைது செய்யும்போது காவல்துறையினரிடம் எதற்காக கைது செய்கிறீர்கள் என்று கேட்டேன். உங்களுக்கு அதிகமாக கூட்டம் கூடுவதன் காரணமாக, கொரோனா அதிகரிக்கும் என்ற காரணத்தால் கைது செய்கின்றோம் என்று தெரிவித்தார்கள். ஆனால் அமித்ஷாவை வரவேற்பதற்காக பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் ஒன்று கூடினார்கள் அப்போது எதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டேன் அது அரசு விழா என்று விளக்கம் அளித்தார்கள் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அப்படி எனில் அரசின் நிகழ்ச்சி என்றால் கொரோனா பரவாது வேறு கட்சிகளின் நிகழ்ச்சி என்றால் மட்டும் அது பரவி விடுமா என்று கேள்வி திருப்பி இருக்கின்றார் உதயநிதி ஸ்டாலின். ஆளும் கட்சிக்கு ஒரு நீதியாகவும் மற்ற கட்சிகளைப் போல நீதியாகவும் இருக்கின்றது பிரச்சாரத்தை தொடர்ச்சியாக நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று டிஜிபியிடம் மனு அளித்திருக்கிறோம். ஒருவேளை காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட உதயநிதி அவர்கள் 7 மணி நேரத்திற்கு மேலாக தங்க வைக்கப்பட்டு இரவு 11 மணி அளவில் விடுவிக்கப்பட்டார் ஆனாலும் தன்னுடைய பயணம் தொடரும் என்று அவர் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்று இருக்கின்றார் இது சம்பந்தமாக தன்னுடைய வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, எங்கள் பிரச்சார பயணத்தை தடுப்பதற்காக மதியம் 2 மணிக்கு கைது செய்தவர்கள் இரவு 11 மணிவரை விடுவிக்கவில்லை அதிரடிப்படை, ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் மிரட்டிப் பார்த்தார்கள். ஆனாலும் நம்முடைய உடன் பிறப்புகளின் கொந்தளிப்பை சமாளிக்க இயலாமல் தற்போது விடுவித்து இருக்கிறார்கள் என்னுடைய பயணத்தை திட்டமிட்டபடி தொடர்வேன் என்று கூறியிருக்கின்றார் உதயநிதி ஸ்டாலின்.