பொடுகு ஒருவித பூஞ்சை நோய்த் தொற்றுகளால் தலையில் ஏற்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதுதான். அதேபோல் இது ஒரு பரவும் தொற்று. மற்றவர்களிடம் இருந்து பரவும். அவர்கள் பயன்படுத்திய துணிகள், சீப்புகளை நாம் பயன்படுத்தும் பொழுது நமக்கும் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. பொடுகு வந்து விட்டால் தலையை அரிக்கும். அரித்து புண்கள் ஏற்படவும் காரணமாக இருக்கின்றன.
இதனை சரி செய்யாவிடில் தலை முடி அளவில்லாமல் உதிரும். பொது இடத்தில் அரிக்கும் பொழுது இது ஒரு சங்கடத்தை ஏற்படுத்தும். அதேபோல் தலையில் வெள்ளைத் திட்டுக்கள் ஆக தெரிவது ஒருவித தாழ்வை உண்டாக்கும்.
இதனை சரி செய்ய அற்புதமான முறையை பார்க்கப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
1. வேப்பம்பூ 50 கிராம்
2. தேங்காய் எண்ணெய் 100 மில்லி
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.
2. அதை அடுப்பில் வைத்து அதில் 100 மில்லி அளவு தேங்காய் எண்ணையை ஊற்றவும்.
3. இதில் 50 கிராம் அளவு வேப்பம்பூவை போட்டு மிதமான தீயில் காய்ச்சவும்.
4. இந்த எண்ணெய் நன்கு காய்ச்சிய உடன் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.
5. இளஞ்சூடு பதத்திற்கு ஆறியதும் வேப்பம்பூவோடு சேர்த்து தலையில் நன்கு தேய்த்து விடவும்.
6. மயிர்க்கால்களில் படும்படி நன்கு தேய்த்து விடவும்.
7. 1/2 மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலையை கழுவிக் கொள்ளலாம்.
8. வாரம் மூன்று முறை இதனை செய்ய பொடுகு ஒரே வாரத்தில் காணாமல் போவதை காணலாம்.