நிவர் புயலை எதிர்கொள்வதற்கு அதிமுக போட்ட அசத்தல் திட்டம்! அசந்துபோன எதிர்க்கட்சிகள்!

0
142

திமுகவினருக்கு அனுபவம் இருக்கின்றதோ அல்லது இல்லையோ அதிமுகவினருக்கு வர்தா புயல் மற்றும் கஜா புயல் என பல பயிர்களை பாடம் கற்பித்து விட்டு சென்றிருக்கின்றது அதேபோல அந்த புயல்களை முதல்வரும் துணை முதல்வரும் அவரவர் ஆட்சிக்காலத்தில் திறம்பட செயல்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் பெரிய புயலை சமாளித்து அவர்கள் இந்த மழை காலத்தையும் மக்கள் சிரமமின்றி சமாளிப்பதற்கு பல திட்டங்களை வகுத்து இருக்கிறார்கள் நிவர் புயலையும் எதிர்க்கொள்ள சுறுசுறுப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றது அதிமுக அரசு.

இந்த வருடத்திற்கான வடகிழக்கு பருவமழை 28 10 2020 அன்று ஆரம்பித்தது அன்று முதல் 16 11 2020 வரை இயல்பான மழை அளவு 28 7.9 மில்லிமீட்டர் ஆனால் இதுவரை 180.7மில்லி மீட்டர் வரை மட்டுமே பெய்து இருக்கின்றது. இது இயல்பான மழையை விடவும் 37 சதவீதம் குறைவான மழைதான் சென்னை காஞ்சிபுரம் திருப்பூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இயல்பான அளவும் 31 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான அளவு மழை பெய்து இருக்கின்றது. தொடர் மழையின் காரணமாக தமிழகம் முழுவதும் இருகின்ற முக்கியமான ஏரிகளின் நீரின் அளவும் உயர்ந்துகொண்டே வந்திருக்கின்றது. இந்த நிலையில் நிவர் புயல் மிரட்டி வருகின்றது.

மழைக்கு முன்பாகவே ஆங்காங்கே அதிகாரிகள் தொடர்ந்து நீர்மட்டம் மற்றும் நீர்த்தேக்க அளவை பார்வையிட்டு வருகிறார்கள். இதன் காரணமாக மக்கள் பயப்படத் தேவையில்லை இந்தப் புயலை எதிர்கொள்வதற்கான கடந்த கால நிகழ்வுகள் தரவுகள் அடிப்படையில் மாநிலத்தில் மொத்தமாக 1133 பகுதிகள் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதியாகும் என தமிழக அரசால் கண்டறியப்பட்டு இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை மற்றும் வெள்ளம் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைப்பதற்கு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உள்பட 4713 தங்கும் மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.

அதோடு கொரோனா நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றும் பொருட்டு கூடுதலாக தற்காலிக தங்கும் மையங்களாக பள்ளிகள் திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் என்று 4680 தங்கும் இடங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.பேரிடர் தொடர்பாக எச்சரிக்கை செய்திடவும் தேடுதல் மற்றும் மீட்பு பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் நிவாரண முகாம்களை நிர்வகிக்கவும் 662 பல்துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

பேரிடர் காலத்தில் உடனடியாக செயல் ஆற்றிட 43 ஆயிரத்து 409 முதல் நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். இவர்களில் 14 ஆயிரத்து 232 பேர் மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் கால்நடைகளை பாதுகாக்க கூடுதலாக 8871 முதல் நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். பேரிடர் காலங்களில் பலத்த காற்றினால் விழும் மரங்களை அகற்றுவதற்கு பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நட்டு வைப்பதற்கு என்று 9 ஆயிரத்து 909 முதல் நிலை மீட்ப்பாளர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். மாவட்டங்களில் 3915 மரம் அறுக்கும் இயந்திரங்கள் 2897 இயந்திரங்கள் 2115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 அதிக திறன் கொண்ட பாம்புகள் தேடும் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரிடம் பயிற்சி பெற்ற 5505 காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் இருக்கிறார்கள் ஊர்க்காவல் படையை சேர்ந்த 691 நபர்களுக்கும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையால் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கின்றது.

Previous article“பூவே உனக்காக” சீரியலுக்கு Bye Bye சொல்லும் நம்ம கீர்த்தி! ஏன் தெரியுமா?
Next articleதிமுகவின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்காத கனிமொழி காரணம் என்ன! தலைமையுடன் விரிசலா!