திமுகவின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்காத கனிமொழி காரணம் என்ன! தலைமையுடன் விரிசலா!

0
74

திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் நேற்றைய தினம் திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுகவின் பிரச்சாரத்தை அதிமுக அரசு காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு தடுப்பது சம்பந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டது அதோடு முன்னரே திமுகவில் முடிவெடுத்து வைக்கப்பட்டிருக்கும் மண்டல பொறுப்பாளர்கள் அறிவிப்பு பற்றியும் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் திமுக மகளிர் அணி செயலாளரும் மக்களவை குழுதுணைத் தலைவருமான கனிமொழி நேற்றைய உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் அவர் இடம் பெற்றிருந்த நிலையிலும் குழு மேற்கொண்ட முதற்கட்ட பயணங்களிலும் அவர் பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதை அடுத்து இப்போது உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

தமிழ்நாட்டை மண்டலங்களாக பிரித்து தென்மண்டலத்திற்கு ஏ.வ வேலு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக ஏற்கனவே தென் மாவட்ட திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்த கனிமொழி அதிருப்தி அடைந்து இருக்கின்றார். அதோடு ஏ.வ வேலு மாவட்டத்தின் திமுக மாவட்ட செயலாளர்கள் உடன் தன்னுடைய ஆலோசனைகளை தொடங்கி இருக்கின்றார்.

இது கனிமொழியை ஓரங்கட்டும் செயல் என்பதை உணர்ந்துதான் தன்னுடைய எதிர்ப்பை அமைதியாக தெரிவிக்கும் விதமாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு கூட்டங்களில் பங்கு பெறாமல் விலகி இருக்கின்றார் கனிமொழி. இப்போது அந்த எதிர்ப்பின் அடுத்தகட்டமாக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தை புறக்கணித்து இருக்கின்றார் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இது சம்பந்தமாக கனிமொழியின் தரப்பிடம் பேசியபோது கனிமொழி நாடாளுமன்றத்தின் வேதியியல், மற்றும் உரங்கள், நிலைக் குழுவின் தலைவராக இருக்கின்றார் இப்போது கொரோனா தடுப்பூசி குறித்து ஒவ்வொரு நிலை குழுவிலும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது அந்த வகையில் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்துவது பற்றிய வேதியியல் மற்றும் உரங்கள் நிலை குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அந்த குழுவின் தலைவராக இருக்கும் கனிமொழியால் அதை தவிர்த்து விட்டு எங்கும் செல்ல முடியாது அது முக்கியமான விவாதம் நடப்பதற்கான கூட்டம் ஆகவே கனிமொழி தலைமையிடம் கூறிவிட்டுத் தான் டெல்லி சென்றார் என்கிறார்கள்.