படர்தாமரை, அரிப்பு 3 நாட்களில் நீங்க இயற்கை மருத்துவம்!

0
1621

படர்தாமரை, அரிப்பு 3 நாட்களில் நீங்க இயற்கை மருத்துவம்!

மூன்றே நாட்களில் உங்களுக்கு ஏற்படும் படர்தாமரை மற்றும் படர்தாமரையினால் ஏற்படும் அரிப்பு நீங்க இயற்கை மருத்துவத்தை தான் பார்க்கப் போகின்றோம்.

படர் தாமரையின் அரிப்பு எந்த இடத்திலும் வரும். அந்த இடத்தை சொரிந்து கொண்டே இருக்க முடியாது. அந்த அரிப்பை சரி செய்யத்தான் இயற்கை வழிமுறையை பார்க்கலாம். இதற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே படர்தாமரை மற்றும் அதனால் வரும் அரிப்பையும் சரிசெய்யலாம்.

தேவையான பொருட்கள்:

1. பாகற்காய் ஒன்று

2. தேங்காய் எண்ணெய்

3. பூஜை கற்பூரம்.

செய்முறை:

1. முதலில் ஒரு பாகற்காயை எடுத்து அதனை நறுக்கி தோல் சீவி எடுத்துக் கொள்ளவும்.

2. தோல் சீவிய பாகற்காயை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

3. இப்பொழுது ஒரு பவுல் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணையை ஊற்றவும்.

4. தேங்காய் எண்ணெயுடன் ஒரு கட்டி பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய கற்பூரத்தை போடவும்.

5. இதனுடன் அரைத்து வைத்திருந்த பாகற்காயின் விழுதை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

6. எங்கு படர்தாமரை உள்ளதோ அங்கு சோப்பு போட்டு கழுவி விட்டு இந்த கலவையை நன்றாக அனைத்து இடத்திலும் படும்படி தேய்த்து விடவும்.

7. இதை படுக்கப் போகும்முன் செய்ய வேண்டும்.

8. காலையில் எழுந்ததும் இதனை கழுவிக் கொள்ளலாம்.

9. இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர படர்தாமரை மற்றும் அதனால் வரும் அரிப்பு நின்றுவிடும். மேலும் படர்தாமரை வந்த இடத்தில் இருந்த தழும்புகளை நீக்கிவிடும்.

Previous articleஒரே பொருள் மூட்டு வலியை முற்றிலுமாக நிரந்தரமாக குணமாக்கிவிடும்!
Next articleதடுப்பூசி போட்ட பிறகும் தாக்கும் கொரோனா! பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்