ஒரே நாளில் 485 பேர் உயிரிழப்பு!

0
111

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இன்று கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 41,322 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,51,110 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 485 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,36,200 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41,452 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 87,59,969 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 93.66 ஆக உள்ளது. நாடு முழுவதும் இன்றைய தேதியில் 4,54,940 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 11,57,605 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 13,82,20,354 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleஅவரு ஒரு காமெடி பீஸ்! அமைச்சரை கலாய்த்த ஆர். எஸ். பாரதி!
Next articleதமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்..!! முதல்வரின் அசத்தல் திட்டம்!