காலையில் எழுந்தவுடன் பித்தத்தால் வாந்தி வருகிறதா? பித்தம் நீங்கி, பசியின்மை போக்க சூரணம்!

0
148

கல்லீரலில் சுரக்கும் அதிகப்படியான பித்தநீர் கெடுதலை விளைவிக்கின்றது. அந்த பித்த நீர் அதிகமாக சுரப்பதனால் தலைவலி, காலையில் எழுந்தவுடன் வாந்தி, மயக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த பித்தத்தைப் போக்கி மற்றும் பசியின்மையை போக்க எளிமையான சூரணம் ஒன்றைதான் பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. பசலைக்கீரை சாறு 200 மில்லி

2. சோம்பு 75 கிராம்

3. நெல்லிக்காய் வற்றல் 75 கிராம்

செய்முறை:

1. முதலில் பசலைக்கீரையை வாங்கிக் கொண்டு அதனை சுத்தப்படுத்தி நன்கு அரைத்து 200 மில்லி சாறு எடுத்துக் கொள்ளவும்.

2. சோம்பு மற்றும் நெல்லிக்காய் வற்றல் இரண்டையும் எடுத்துக் கொள்ளவும்.

3. இந்த பசலைக் கீரை சாற்றில் சோம்பு மற்றும் நெல்லிக்காய் வற்றலை போட்டு நன்கு கலக்கி ஊற வைக்கவும்.

4. ஊற வைத்த பின்னர் வெயிலில் காய வைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.

5. இது ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

6. இந்த சூரணத்தை 2 கிராம் அளவு எடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

இது பித்தத்தை குறைக்க உதவும் அரு மருந்தாக செயல்படுகின்றது. மேலும் பசியின்மையை போக்கி பசியை தூண்ட வல்லது.

Previous articleஇடுப்பு வலி தாங்க முடியவில்லையா? உங்களுக்கான இயற்கை வைத்திய முறைகள்!
Next articleமக்களுக்குத் துரோகம் இழைத்த அதிமுக அரசு!