குடும்ப அட்டையை மாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! வெளியான அதிரடி அறிவிப்பு!!

0
345

சர்க்கரை குடும்ப அட்டையை தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டையாக மாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் தற்போது 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை ஏற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து இன்று (டிச. 08) முதல் டிசம்பர் 20ம் தேதி வரை வரை www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இல்லையெனில் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவியாளரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு சர்க்கரை குடும்ப அட்டைகள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!
Next articleஇந்தியாவில் 97 லட்சத்தை கடந்த பாதிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here