இந்தியாவில் 97 லட்சத்தை கடந்த பாதிப்பு!!

0
305

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இன்று கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,567 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,03,770 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 385 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,40,958 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,045 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 91,78,946 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 94.59 ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் சதவீதம் 1.45 ஆக உள்ளது. நாடு முழுவதும் இன்றைய தேதியில் 3,83,866  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous articleகுடும்ப அட்டையை மாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! வெளியான அதிரடி அறிவிப்பு!!
Next articleட்விட்டரில் ட்ரெண்டாகும் ஸ்டாலின் விவகாரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here