டில்லி நீதிமன்றம் : திருமண வாக்குறுதி கொடுத்துவிட்டு ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டபின் திருமணம் செய்ய மறுத்தால் , அது பாலியல் பலாத்கார குற்றமாகாது என்ற அதிர்ச்சி தரும் தீர்ப்பை தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு இளைஞர் , ஒரு பெண்ணை காதலித்து , பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார் . பின்னர் அந்த இளைஞர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த அந்த பெண் , நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.இதனை விசாரித்த நீதிபதிகள் இந்த புதிய தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
திருமணம் செய்வதாக கூறி வாக்களித்துவிட்டு உடலுறவில் ஈடுபடும் போது அந்தப் பெண்ணும் உடன் படுவார்கள் என்றும், இருவர் சம்பளத்தில் மட்டுமே உடலுறவு கொள்வார்கள் என்றும், பின்னர் அந்த ஆண் திருமணத்திற்கு மருத்தால் அதற்கு பாலியல் பலாத்காரமாக கருத இயலாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணம் செய்துகொள்வோம் என்று வாக்குறுதி அளித்தாலும், அந்த பெண் உடல் உறவுக்கு சம்மதிக்க கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் வந்த தீர்ப்பு ஆண்களுக்கு சாதகமாக இருந்தாலும் , பெண்களுக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தீர்ப்பானது பெண்களின் எதிர்காலத்தை பெரிதும் கேள்விக்குறியாகி விடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது .மேலும் இது போன்ற தீர்ப்பை இதற்கு முன்னரும் நீதிமன்றம் வழங்கியிருப்பது குறிப்பிட