முன்கூட்டியே தேர்தலை நடத்த கோரிக்கை வைத்தது ஏன்! ஆளும் தரப்பு!

0
115

மே மாதத்தில் கோடைகாலம் என்பதால் வெயில் அதிகமாக இருக்கின்ற காரணத்தால், முன்கூட்டியே சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று அதிமுக தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்திருக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் சென்னை வந்து இருக்கின்றது. இந்த குழு இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் நடத்திய ஆலோசனையில், தேர்தலை முன்கூட்டியே நடத்தியது. குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சமயத்தில் திமுக தரப்பில் ஒரே நாளில் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டதாக அந்த கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலே, ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏப்ரல் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில், தேர்தல் நடத்துவதற்கு கோரிக்கை வைத்திருப்பதாகவும், மே மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால், முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு கோரிக்கை வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார். 500 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையிலே வாக்குச் சாவடி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருப்பதாகவும், தெரிவித்தார் பொள்ளாச்சி ஜெயராமன். தேர்தலுக்காக 2500 ரூபாய் பணம் கொடுக்கப்படவில்லை வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.

Previous articleமீண்டும் சர்ச்சையில் சிக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! எதனால் தெரியுமா?
Next articleகூட்டணியில் தொடரும் மோதல்! அப்செட்டில் டெல்லி வட்டாரம்!