கோபத்தில் அமித்ஷா !கொந்தளிப்பில் எடப்பாடி ! !கிளுகிளுப்பில் துரைமுருகன்!!!

0
228

கோபத்தில் அமித்ஷா கொந்தளிப்பில் எடப்பாடி கிளுகிளுப்பில் துரைமுருகன்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி நூலிழையில் கோட்டை விட்டதால் கோட்டையே கோபத்தில் உள்ளதாம்

திமுகவின் பணபட்டுவாடா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு , மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வாக்குப்பதிவு கடந்த ஆகஸ்டு 5-ம் தேதி நடைபெற்றது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியை எப்படியாவது கைப்பற்றியே ஆகவேண்டும் எனவே வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்றாக வேண்டும் என்று மத்தியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இத்தேர்தலில் தன் மகன் தோற்றால் தன்மானம் இழந்து திமுகவிலிருந்து மதிப்பிழந்து விடும் கட்டாயத்தில் சீறிப்பாய்ந்த சிகப்பு நோட்டுகளின் பின்னால் அதிமுக, திமுக என இரண்டு தரப்பினரும் படுவேகமாக வேலை பார்த்ததில் வெற்றி தங்களுக்கு தான் என்று இரண்டு தரப்பினரும் கூறி வந்தனர்.

அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது, இறுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை விட சுமார் 8 ஆயிரத்து 141 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார்.வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போராடி தனது வெற்றியை அதிமுக நூலிழையில் தவற விட்டது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் தோல்வியால் அமித்ஷா, பிரதமர் மோடி தரப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் அவர்களின் நேரடி தொடர்பில் உள்ளவர்களின் மூலம் முதல்வருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தோல்வியை ஈடுகட்ட தமிழகத்தில் காலி தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இந்த இடைதேர்தலிலாவது வெற்றி பெற்று காட்டவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு மோடி அமித்ஷா தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து திமுக பொருளாளர் துரைமுருகனிடம் கேள்வி கேட்கப்பட்டது. உங்கள் மகனின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள். அவர் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்று இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு சற்று நக்கலுடன் பதில் அளித்த துரைமுருகன், “ஆமாம் அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். நான் அதில் நினைக்க என்ன இருக்கிறது. அவர்தான் வென்று விட்டாரே”.

அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றது பற்றி பத்திரிக்கையாளர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

” அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதே தான் நானும் நினைக்கிறேன்”, என்று கிண்டலாக குறிப்பிட்டார்.

கதிர் ஆனந்த் வெற்றிபெறுவாரா என்று திமுகவினர் பதற்றத்தில் இருந்த நேரத்தில் துரைமுருகன் இப்படி பேசியது பெரிய வைரலானது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleஒரு படத்தோட டீசரை இப்படில்லாமா ரிலீஸ் பண்ணுவாங்க!? – ஷாக் ஆன ரசிகர்கள்!
Next articleகாங்கிரஸ் 12 எம்.பி கள் பிஜேபியில் இணைந்தார்களா? காஷ்மீர் பிரச்சனைக்கு காங்கிரசே காரணம்? போட்டு உடைத்த வைகோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here