வாய்ப்பை இழந்த தமிழகம்! அறிவித்தது இந்திய வானிலை!! அடுத்த வாய்ப்பு
மறுநாளே எதிர்பார்ப்பு!!!
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை முதல் மழை குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலங்களில் முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், நாளை முதல் தமிழகம், கேராளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் காற்றழுத்த தாழ்வு உருவானால் 13ஆம் தேதி முதல் மீண்டும் மழை அதிகரிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வங்கக்கடலில் 40 முதல் 50 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.