காலங்காலமாக பயன்படுத்தி வரும் இயற்கை முறைகளை விட்டுவிட்டு செயற்கையாக ஆங்கில மருத்துவத்திற்கு மாறி மாத்திரைகளை உண்டு உடல் உபாதைக்கு ஆளாகி விடுகிறோம். எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் சென்று மாத்திரைகளை வாங்கி சாப்பிட்ட நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க மறந்து விடுகிறோம்.
அந்தக் காலத்தில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நம் முன்னோர்கள் அவர்களது உடலை பேணி பாதுகாத்து வந்தார்கள். ஆனால் நாம் இன்று ஒரு பிரச்சனையாக இருந்தாலும் டாக்டரை அணுகி பல லட்ச ரூபாய்களை செலவழிக்கிறோம். ஆனால் அதற்கான தீர்வு நம் வீட்டிலேயே மிக எளிமையாக இருக்கும் என்பதையும் மறந்து விடுகிறோம். சொன்னாலும் கேட்க மறுத்து விடுகிறோம்.
இன்று நாம் பார்க்கக்கூடிய முறையானது மிக மிக எளிய முறை. ஜலதோஷம் பிடித்தால் என்ன பண்ண வேண்டும்?
அதற்கு மஞ்சள் மட்டும் போதுமா?
இதோ உங்களுக்கான வழிமுறை.
தேவையான பொருட்கள்:
1. மஞ்சள் துண்டு
2. மெழுகுவர்த்தி
செய்முறை:
1. முதலில் நேராக உங்கள் வீட்டிற்கு சென்று வீட்டில் இருக்கும் காட்டு இயற்கை மஞ்சள் இதை கங்கணம் என்றும் சொல்வார்கள். இதை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. மெழுகுவர்த்தியை எடுத்து அதை பற்ற வைத்துக் கொள்ளவும்.
3. இப்பொழுது மஞ்சள் துண்டின் ஒருபுறம் மெழுகுவர்த்தியில் காட்டி நன்றாக எரிய விடவும்.
4. மஞ்சள் நன்கு எரிந்ததும் அதில் இருந்து புகை வர ஆரம்பிக்கும்.
5. அந்தப் புகையை நன்றாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
6. அவ்வளவு தான் உங்களது ஜலதோஷம் படிப்படியாக குறைய ஆரம்பித்துவிடும்.
இது முற்றிலும் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தான் நாம் செய்யப் போகின்றோம். இதை பயன்படுத்தி பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஒரு நல்ல தீர்வாக அமையும். மேலும் டாக்டரிடம் செல்லாமல் வீட்டில் இருந்தே உங்களுக்கு இயற்கையான முறையாக எளிய முறையாக அமையும்.