இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும்! இன்றைய ராசி பலன் 03-01-2021 Today Rasi Palan 03-01-2021

0
184

 

இன்றைய ராசி பலன்- 03-01-2021,

நாள் : 03-01-2021,

தமிழ் மாதம்: 

மார்கழி 19, ஞாயிற்றுக்கிழமை

சுப ஹோரைகள்

காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

இராகு காலம்: 

மாலை 04.30 – 06.00,

எம கண்டம்:

பகல் 12.00 – 01.30

குளிகன்:

பிற்பகல் 03.00 – 04.30,

திதி:

சதுர்த்தி திதி காலை 08.23 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.

நட்சத்திரம்:

மகம் நட்சத்திரம் இரவு 07.56 வரை பின்பு பூரம்.

 

மரணயோகம் இரவு 07.56 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சற்று பலவீனமாக காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களில் கவனம் தேவை.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு பயணங்களால் அலைச்சல் இருக்கும். சிலருக்கு வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கடன்கள் ஓரளவு குறையும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வீண் பிரச்சினைகள் தேடி வரலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டின் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகி எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நினைத்தது நிறைவேறும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண முயற்சிகளை தொடங்க அனுகூலமான நாளாகும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட்டால் நற்பலன் கிட்டும்.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். முக்கிய பேச்சு வார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.

 

கும்பம்

 

கும்ப ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

 

மீனம்

 

மீனம் ராசிக்கு உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

Previous articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்: 03.01.2021
Next articleமலை உச்சியில் தனது காதலை வெளிப்படுத்திய காதலன், நிகழ்ந்த விபரீதம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here