ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அந்த சமயத்திலே, அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருக்கின்றார். ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் தான் ஸ்டாலினும், அழகிரியும், ஆனாலும் கூட அழகிரிக்கு கட்சியில் வாய்ப்பு கொடுக்காமல் இருப்பவர்கள் நாட்டு மக்களுக்கு என்ன செய்துவிடுவார்கள்? திமுக என்பது கட்சி இல்லை அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அதன் சேர்மனாக இப்பொழுது ஸ்டாலின் இருக்கிறார். பின்னாளில் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பார் என்று தெரிவித்திருக்கிறார்.
கோயமுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த நேரத்திலே, விவசாயிகள் பம்பு கட்டணம் குறைக்க வேண்டும் என்று தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அந்த சமயத்தில், அவர்களை சுட்டுக்கொன்றவர்கள்தான் இவர்கள். திமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மின்வெட்டு தலைதூக்கி விடும். திமுகவில் இருக்கின்ற எல்லோருமே ரவுடிகள் தான். ஆனால் அதிமுகவில் இருப்பவர்கள் உண்மையான விவசாயிகள் நாட்டிலேயே அனைத்து துறைகளிலும் விருது வாங்கிய ஒரே மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.