சிறுநீர் சொட்டுச் சொட்டாக போதல், சிறுநீர் கழிக்க முடியாமல் போதல், சிறுநீரை அடக்க முடியாமல் தவித்தல் போன்ற பிரச்சினைகள் 60 வயதைத் தாண்டினாலே அனைவருக்கும் வந்துவிடும். இதற்கு காரணம் ப்ரோஸ்டேட் என்ற சுரப்பிகள் பெரியதாகும் போது இந்த மாதிரியான பிரச்சனைகள் வரும். புரோஸ்டேட் சுரப்பி என்பது மிகச் சிறிய உறுப்பு அது சிறுநீர் பைக்குக் கீழே இருக்கும்.
சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டப்படுவது, சிறுநீர் சொட்டு சொட்டாக போதல்,சிறுநீர் கழிக்க உந்துதல், எப்பொழுதும் சிறுநீர்ப் பை நிரம்பி இருப்பது போன்ற உணர்வு, சிறுநீர் ஓட்டம், சிறுநீர் கழிக்க சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் கண்டிப்பாக இயற்கை வைத்தியத்தை நாடி சரி செய்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ 30 கிராம்
கடுக்காய் 30 கிராம்
தென்னம்பூ 30 கிராம்
மாதுளம்பூ 30 கிராம்
கடுக்காய் பூ 30 கிராம்
மஞ்சள் 30 கிராம்
செய்முறை:
1. இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
2. அனைத்தையும் வாங்கி வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளவும்.
3. இதனை காலை மதியம் இரவு என மூன்று வேளைகளில் 2 கிராம் வீதம் சாப்பிட்டு வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
படிகாரத்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து தயிரில் கலந்து சாப்பிட்டுவர சிறுநீர் சொட்டு சொட்டாக போதல் சரியாகும்.