மீண்டும் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!!!

0
208

தங்கம் விலை பல மாதங்களாகவே நினைத்து பார்க்க முடியாத அளவு ஏற்றத்துடன் அவ்வப்போது குறைந்தும் காணப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கடந்த 30ஆம் தேதி முதல் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை தற்போது மெதுவாக குறைய ஆரம்பித்துள்ளது.

தங்கத்தின் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4805 ரூபாய்க்கும்,சவரன் 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 38,440க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்று காலை நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 13 குறைந்து ஒரு கிராம் 4754 ரூபாய்க்கும், சவரன் 104 குறைந்து 38,032 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.அதாவது கிராமுக்கு 54 ரூபாய் குறைந்து 22 கேரட் தங்கம் ரூபாய் 4700 ஆகவும்,சவரன் 37,600 க்கும் விற்கப்பட்டு வருகிறது.இன்று மட்டும் 432 ரூபாய் குறைந்துள்ளது‌.

Previous articleதிமுக கூட்டணியில் ஓவைசி இணைப்பு? திமுக கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி!
Next articleஒரு குழந்தைக்கே இவ்வளவு பணமா! அள்ளிக்கொடுக்கும் தென்கொரியா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here