இந்த ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம் ! இன்றைய ராசி பலன் 10-01-2021 Today Rasi Palan 10-01-2021

0
185

 

இன்றைய ராசி பலன்- 10-01-2021,

நாள் : 10-01-2021,

தமிழ் மாதம்: 

மார்கழி 26, ஞாயிற்றுக்கிழமை

சுப ஹோரைகள்

காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

இராகு காலம்:

மாலை 04.30 – 06.00,

எம கண்டம்: 

பகல் 12.00 – 01.30,

குளிகன்:

பிற்பகல் 03.00 – 04.30,

திதி:

துவாதசி திதி மாலை 04.53 வரை பின்பு தேய்பிறை திரியோதசி.

நட்சத்திரம்:

அனுஷம் நட்சத்திரம் பகல் 10.49 வரை பின்பு கேட்டை.

நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாள் ஆராதனை. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே நீங்கள் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே குடும்பத்தில் இனிய நிகழ்ச்சிகள் நிகழும். பிள்ளைகள் புது உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை கூடும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளாலும் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நிறைவேறும்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்கு குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

 

மீனம்

 

மீன ராசிக்கு இன்று உங்களுக்கு எதிர்பாராத இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.

Previous articleபிந்து மாதவியின் அசத்தலான வைரலாகும் புகைப்படம்!!
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணக் கஷ்டம் குறையும். ! இன்றைய ராசி பலன் 11-01-2021 Today Rasi Palan 11-01-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here