பேஸ்புக்கில் ஆபாச சேட்டிங் – பொறிவைத்துப் பிடித்து வெளுத்து வாங்கிய வீரமங்கை.
பேஸ்புக் மெசஞ்சரில் ஆபாசமாக பேசிய இளைஞர் வெளுத்து வாங்கிய வீரமங்கை இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்.
தேனியை சேர்ந்த ராஜா என்பவர் மன்மத ராஜா போல் முகநூலில் இருக்கும் பல பெண்களுக்கு ஆபாச சேட்டிங் மற்றும் ஆபாச புகைப்படங்கள் வீடியோக்களை அனுப்பி வந்துள்ளார்.
இதேபோல் திண்டுக்கல்லை சேர்ந்த பெண்ணொருவருக்கு தனது வழக்கமான பாணியில் ஆபாச சேட்டிங் செய்து வந்துள்ளார் ராஜா. இதனால் கடுப்பான அந்த பெண் தேனியில் உள்ள தனது தோழியான பத்ரகாளிபுரத்தைச் சேர்ந்த தமிழரசியிடம் உங்கள் ஊரைச் சேர்ந்த பையன் ஒருவன் முகநூலில் தொடர்ந்து தொல்லை செய்து வருகிறான் என்று வருத்தத்தோடு கூறியிருக்கிறார்.
இதனால் தமிழரசி ராஜாவை பொறி வைத்து பிடிக்க மெசேஞ்சரில் பேசி அவனை தேனியில் உள்ள ஒரு இடத்திற்கு வர வைத்திருக்கிறார். ராஜாவும் ஏதோ பெண் வலையில் சிக்கி விட்டாள் என்று வேகவேகமாக தமிழரசி சொன்ன இடத்திற்கு வந்து இருக்கிறார்.
ஆனால் அந்த இடத்திற்கு தன் கணவன் மற்றும் மகனோடு வந்த தமிழரசி ராஜாவை பிடித்து வெளுத்து வாங்கியிருக்கிறார். மேலும் போலீஸ் நிலையத்திற்கு செல் அல்லது உன்னுடைய தந்தை , தாய் இங்கே வரச்சொல் என்று பேச மிரண்டு போன ராஜா காலில் விழுந்துள்ளார்.
பிரச்சனை பெரிதாக தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும் ராஜாவை அடித்து துவைத்து உள்ளார்கள். மேலும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
குற்றவாளியான ராஜாவை பொதுமக்கள் அடிக்கும் வீடியோவானது இணையத்தில் வைரல் ஆனதால் வீரப்பெண்மணி தமிழரசி அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிகின்றது.