சசிகலா விடுதலை! அமித்ஷாவிடம் முக்கிய கோரிக்கையை வைத்த முதலமைச்சர்!

0
125

நேற்று மாலை டெல்லிக்குப் போன தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரவு சுமார் ஏழு முப்பது மணி அளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இருக்கிறார் இந்த சந்திப்பானது சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

அரசுமுறைப் பயணம் தான் என்றாலும் கூட அரசியல் ரீதியாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக இந்த பயணம் தெரிகின்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடன் தலைமைச் செயலாளர் சண்முகம், அமைச்சர் ஜெயக்குமார், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார், போன்றோர் போய் இருந்ததாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு இல்லத்தில் சற்று நேரம் ஆலோசனை செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,இரவு ஏழு முப்பது மணி அளவில் அமித்ஷாவை அவருடைய வீட்டிற்கு சென்று சந்தித்து இருக்கிறார்.

அந்த சமயத்தில் தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி ,அதோடு தொகுதி பங்கீடு, போன்றவை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது .அதோடு முக்கியமாக வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகும் காரணத்தால், அவருக்கு ஆதரவாக அரசியல் ரீதியாக பாஜக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்ற கோரிக்கையையும் அமித்ஷாவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வைத்திருக்கிறார்.

அதோடு அதிமுகவில் இருக்கக்கூடிய முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் போன்றவர்களிடமிருந்து சசிகலாவிற்கு ஆதரவாக ஒரு சில நேரங்களில் பேச்சுக்கள் எழுந்து வருகிறது. அதனை கண்டித்து வரும் முதலமைச்சர் இப்படியாக சசிகலா வெளியே வந்தவுடன் அவருக்கு கட்சிக்குள் வருவதற்கான எந்த வாய்ப்பையும் விட்டுவைக்காமல், ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தி வருகின்றார். ஆக மொத்தத்தில் சசிகலா வெளியே வருவதற்குள் அவருடைய அனைத்து வழிகளையும் அடைத்து விட வேண்டும் என்பதே முதல்வரின் குறிக்கோளாக இருப்பதாக சொல்கிறார்கள்.

Previous articleகூட்டணி தொகுதி பங்கீட்டில் வேகமெடுக்கும் அதிமுக! நிதானமான பாஜக!
Next articleமுகநூலில் நூல்விட்ட ஆசாமியை கதற விட்ட பெண்!